அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மரியாதை


கரூர், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, கரூரில் நேற்று கொண்டாடப்பட்டது.

கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர், நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அப்போது, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர தி.மு.க., செயலர் கனகராஜ், வடக்கு நகர பொறுப்பாளர் பாண்டியன், பகுதி செயலர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலர் ஆலம் தங்கராஜ், பொருளாளர் கண்ணதாசன், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.
* கரூர் மாவட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் திருகை கணேசன்
தலைமையில், திருகாம்புலியூரில் அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில், மாநில தொழிற்சங்க துணை செயலர் கணேசன், மாவட்ட பொருளாளர் ஓம்சக்தி சேகர் உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement