தங்கம் விலையில் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை: சென்னையில் இன்று (செப் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,220 ரூபாய்க்கும், சவரன், 81,760 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக் கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 10,210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் சரிவடைந்து, 81,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (செப் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

மேலும்
-
விவசாய உற்பத்தியை அதிகரிக்க உர பற்றாக்குறையை தவிர்க்கணும்; பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
-
மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு
-
திமுகவினர் கள்ளச்சாராயம் விற்கின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் புதிதாக 6000 ஓட்டுச்சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது
-
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது
-
தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு