நியூயார்க் டைம்ஸ் மீது மான நஷ்ட வழக்கு: ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி கேட்கிறார் டிரம்ப்

14


வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் மீது, 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்) மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.


அமெரிக்காவின் பிரபல நாளிதழ் நியூயார்க் டைம்ஸ். இந்த பிரபல நாளிதழ் மீது அதிபர் டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நீண்ட காலமாக என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறது.

அந்த நாளிதழ் மீது 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்) மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர இருக்கிறேன்.



தீவிர இடது ஜனநாயக கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் மற்றும் வணிகத்தை பற்றியும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்தி வெளியிடுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பகல்ஹாம் தாக்குதல் நடந்தபோது, 'ஜம்மு - காஷ்மீரில் போராளிகள் தாக்குதல்' என செய்தி வெளியிட்டுள்ள, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்க அரசு, 'அது பயங்கரவாத தாக்குதல்' என, தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement