தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பயணிகளுக்கு வசதியாக, 6 சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1.நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்:
நாகர்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், செப்டம்பர் 28, அக்டோபர் 05,12,19,26 ஆகிய தேதிகளில்(ஞாயிற்றுகிழமை) நாகர்கோவிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
அதேபோல் தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாகர்கோவிலுக்கு அதிகாலை 5.15 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
நாகர்கோவிலிருந்து வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை,திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர்,பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை , சீர்காழி மற்றும் சிதம்பரம், விழுப்புரம்,மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்து சேரும்.
2.எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலிருந்து போத்தனுார் வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்:
சென்னை சென்ட்ரலிலிருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில்(வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் போத்தனுாருக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல போத்தனுாரிலிருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 03, 10, 17,24 ஆகிய தேதிகளில்(வெ ள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு செ ன்னை சென்ட்ரல்க்கு அதிகாலை 03.15 மணிக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரலிருந்து புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வடக்கு, கோவை வழியாக போத்தனுார் அடையும்.
3.சென்னை சென்ட்ரலிலிருந்து செங்கோட்டை வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்:
சென்னை சென்ட்ரலிலிருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 01, 08, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மாலை03.15 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் அதிகாலை 06.30 மணிக்க வந்து சேரும்.
அதேபோல, திரும்ப செங்கோட்டையிலிருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 02, 09, 16,23 ஆகிய தேதிகளில்(வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை சென்ட்ரலுக்கு காலை 11.30 மணிக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலிருந்து புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பே ட்டை, சே லம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வந்து சேரும்.
4.திருநெல்வேலி-சென்னை எக்மோர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்:
திருநெல்வேலியிலிருந்து செப்டம்பர் 25, அக்டோபர், 02,09, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சென்னை எக்மோருக்கு காலை 10 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல திரும்ப, சென்னை எக்மோரிலிருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருநெல்வேலிக்கு அதிகாலை 1.30 மணிக்கு வந்துசேரும்.
இந்த சிறப்பு ரயில், திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தே வகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருதாச்சலம், விழுப்புரம், மே ல்மருவத்துார், செ ங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எக்மோர் வந்து சேரும்.
5.துாத்துக்குடி-சென்னை எக்மோர்- துாத்துக்குடி வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள்:
துாத்துக்குடியிலிருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20,27 ஆகிய தேதிகளில் (திங்கள் கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை எக்மோருக்கு காலை 10.45 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல, திரும்ப சென்னை எக்மோரிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு,
செப்டம்பர் 30, அக்டோபர் 07, 14, 21,28 ஆகிய தேதிகளில் ( செவ்வாய் கிழமை) மறுநாள் துாத்துக்குடிக்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் துாத்துக்குடியிலிருந்து கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருதாச்சலம், விழுப்புரம், மே ல்மருவத்துார், செ ங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எக்மோருக்கு வந்து சேரும்.
6.நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்:
நாகர்கோவிலிருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 07, 14, 21,28 ஆகிய தேதிகளில் (செவ்வாய் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல, திரும்ப சென்னை சென்ட்ரலிருந்து அக்டோபர் 01, 08,15, 22,29 ஆகிய தேதிகளில்(புதன்கிழமை) அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு, வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஹெச்1பி விவகாரம்: பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர்; மத்திய அரசு நம்பிக்கை
-
தமிழகத்தில் சிறுநீரகத் திருடர்களுக்கான அரசு: சாடுகிறார் அன்புமணி
-
வெற்றிகரமாக நிறைவு பெற்றது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!
-
நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!
-
கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!
-
மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு