தமிழகத்தில் புதிதாக 6000 ஓட்டுச்சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது

சென்னை: தமிழகத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது.
தமிழகத்தில் தற்போது 68,000 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், புதிதாக 6,000 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை 74,000 மாக உயருகிறது. தமிழகத்தில் ஜனவரி நிலவரப்படி, 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில் பெரிய ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், நகர்ப்புற வாழ்வாதாரதிட்டப் பணியாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக செயல்பட புதிய துறைகளின் ஊழியர்களையும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
