சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 :00 மணிக்கு நந்தி, கொடிமரம் ,காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - வி .ஐ. பி .,நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி , ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பழநி: முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மேலும்
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
-
இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
கோவை, நீலகிரி, தேனி உட்பட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
-
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
-
ரகாசா சூறாவளியை சமாளிக்க தயாராகும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து; ஹாங்காங் ஏர்போர்ட் 36 மணிநேரம் மூடல்
-
அரசின் சமூகநீதி விடுதிகளில் அரங்கேறும் மதமாற்றம்: வீடியோ ஆதாரத்துடன் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு