மின்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தெலுங்கானாவில் ரூ.2 கோடி ரொக்கம் மீட்பு

7

ஐதராபாத்: தெலுங்கானாவில் மின்துறை அதிகாரி வீட்டில் நடந்த சோதனையில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரூ.2 கோடி ரொக்கப்பணத்தை மீட்டனர்.

தெலுங்கானாவில் மணிகொண்டா பிரிவில் மின்சாரத் துறையில் உதவிப் பிரிவு பொறியாளராக பணியாற்றிவருபவர் அம்பேத்கர், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். மேலும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்தன. குறிப்பாக, பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் மற்றும் தியேட்டர்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்க லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் பொறியாளரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில், ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனை அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் மற்றும் கச்சிபவுலி உள்ளிட்ட இடங்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் உறவினர்களின் வீடுகளிலும் 15 முதல் 18 பேர் கொண்ட அதிகாரிகள், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்து ரூ.2 கோடி ரொக்கப்பணமும், கணிசமான அளவு தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பிற சொத்துக்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement