புகழ்பெற்ற வைஷ்ணோதேவி கோயில் யாத்திரை; 22 நாட்கள் கழித்து இன்று மீண்டும் தொடங்கியது

கத்ரா: ஜம்முகாஷ்மீரில், புகழ்பெற்ற வைஷ்ணோதேவி கோயில் யாத்திரை 22 நாட்கள் கழித்து இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணோதேவி குகை கோயில் மிகவும் புகழ்பெற்றது. கடந்த மாதம் 26ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோதேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 34 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை, நிலச்சரிவு காரணமாக யாத்திரை எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருந்தது.

இந் நிலையில் 22 நாட்கள் கழித்து இன்று முதல் மீண்டும் வைஷ்ணோதேவி கோயில் யாத்திரை தொடங்கி இருக்கிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைஷ்ணோ தேவி கோயில் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, யாத்திரை தொடங்கும் இடமான பங்கங்கா தர்ஷனி நுழைவு வாயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். யாத்திரை மீண்டும் தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள், ஜெய் மாதா தீ என்று முழக்கமிட்டபடியே பக்திமயத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement