ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் 3 பேர் மீது கொலைவெறி தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு

5

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் மூன்று பயணிகளை தாக்கி காயமடையச்செய்து தப்பினார். காயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார். தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.

காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 2 பேரின் விவரங்கள் தெரியவில்லை; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பிச்சென்ற வடமாநில வாலிபரை தேடி வருகின்றனர்.

Advertisement