கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுவோம்; பயங்கரவாதிகள் கொக்கரிப்பு

வான்கூவர்: கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை செப்.18ம் தேதி முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. செப். 18ம் தேதி கனடா வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு 12 மணி நேரம் போராட்டம் நடத்த போவதாக கூறி உள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; 2023ம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜார் படுகொலையில் இந்தியர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கனடா பிரதமர் ட்ரூடோ பார்லி.யில் அறிவித்தார்.
2 ஆண்டுகள் கடந்தும் காலிஸ்தான் இயக்கத்தினரை குறி வைத்து உளவு அமைப்புகள் செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் ஊடே, புதிய கமிஷனர் தினேஷ் பட்நாயக் முகத்தை காட்டும் படத்தை போட்டு அதை குறிவைப்பது போன்று போட்டோ ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் முந்தைய பிரதமர் ஜஸ்டின் இருந்தபோது காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனால் இந்தியா- கனடா உறவு சீர்கெட்டது. ஜஸ்டின் பதவி விலகி புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாலாட்ட தொடங்கியுள்ளனர்.









