மழையில் நெல்லை வீணாக்குவது அரசுக்கு அழகா?

கடலுார், தஞ்சை என, தமிழகம் முழுதும் நெல் கொள்முதல் நிலையங்களில், மழையில் நனைந்து நெற்பயிர்கள் சேதமடைவது, கவலை அளிக்கிறது.
தலைக்கு மிஞ்சிய கடன்களை தாங்கி, வறட்சியில் வியர்வையை சிந்தி, பயிரை விளைவித்து, நல்ல விலை கிடைக்கும் என்று நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொடுத்தால், அதை மழையில் நனைய விட்டு, வீணாக்குவது தான் ஒரு அரசுக்கு அழகா? உணவு சேமிப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, 50 சதவீதம் குறைத்த, தி.மு.க., அரசின் நிர்வாக திறனின்மையால், விவசாயிகள் அவதியுற வேண்டுமா?
கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை அறிவிப்பு வெளியான நிலையில், விவசாயிகளின் கதறலை பார்த்த பின்பாவது, நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த, தி.மு.க., அரசு கவனம் செலுத்துமா அல்லது வழக்கம் போல் வெற்று விளம்பரத்தில் கவனம் செலுத்துவோம் என இருக்குமா? -
நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.
@quote@ quote
