ஆப்கனில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: ''ஆப்கானிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது'' என ஐநாவில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது.
ஐநாவில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆர்வம் உள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்ததை வரவேற்கிறோம். கடந்த மாத பேரழிவு தரும் பூகம்பத்திலிருந்து நாடு மீண்டு வருவதால், வறுமை, நோய் மற்றும் பசியின் பிடியில் தவிக்கும் மில்லியன் கணக்கான ஆப்கானியர்களுக்கு இரக்கம் காட்டவும் உதவிக்கரம் நீட்டவும் வேண்டும்.
பூகம்பத்திற்குப் பிறகு, மனிதாபிமான உதவிகளை வழங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 டன் உணவுப் பொருட்களை வழங்கியது. அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரப் பெட்டிகள், போர்வைகள் மற்றும் ஜெனரேட்டர்கள் உட்பட கூடுதலாக 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானை உருவாக்க சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
நவராத்திரி முதல் நாளில் 10 ஆயிரம் கார் விற்பனை: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
-
‛‛சேட்டான்''கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!
-
மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்
-
நாமக்கல்லில் வருமான வரித்துறை ரெய்டு
-
அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!