ஆசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியா

செரெம்பன்: ஆசிய கோப்பை கூடைப்பந்து (16 வயது) பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.

மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர் நடக்கிறது. இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன் இடம் பெற்றது. லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் நேற்று, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்தேனேஷிய அணியை சந்தித்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 24-24 என சமநிலையில் இருந்தன. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 65-53 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
இன்று, இதில் இந்திய அணி, மீண்டும் ஈரானை எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் வென்ற இந்தியா, மீண்டும் அசத்தினால் கோப்பை வெல்லலாம்.

Advertisement