ஐ.பி.ஓ., புதிய பங்கு வெளியீட்டு ரேஸில் பழைய கார் விற்பனை நிறுவனங்கள்

பழைய கார்களுக்கான ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டுள்ள யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களான 'கார்ஸ்24, கார்தேகோ, ஸ்பின்னி' ஆகியவை, புதிய பங்கு வெளியீடு வாயிலாக முதலீட்டை திரட்ட தயாராகி வருகின்றன. அடுத்த 12- -18 மாதங்களில் ஐ.பி.ஓ.,வுக்கு வருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும்
கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக பழைய கார்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பார்வை உள்நாட்டு தொழில்கள் மீது திரும்பி உள்ளது.

சமீபத்தில், புளூம்பெர்க் வெளியிட்ட தரவுகளின்படி, தெற்காசிய நாடுகளில் உள்ள
நிறுவனங்கள், நடப்பாண்டில் ஐ.பி.ஓ., வாயிலாக கிட்டத்தட்ட 88,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துஉள்ளது தெரியவந்துள்ளது.


பங்குச் சந்தையில் தற்போது, இத்துறையைச் சேர்ந்த 'கார்டிரேடு டெக்' நிறுவனத்தின் பங்குகள் மட்டும் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

Advertisement