20 கோடி உயிர்களை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவ குழுமம்
சென்னை, 'அப்பல்லோ மருத்துவ மனைகள் வாயிலாக, 42 ஆண்டுகளில், 20 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது' என, அப்பல்லோ மருத்துவ மனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அப்பல்லோ மருத்துவ மனையை, 1983ம் ஆண்டில் துவங்கிய போது, ஒரு மருத்துவமனை துவக்கமாக மட்டுமின்றி, ஒரு சுகாதார இயக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது.
கடந்த 42 ஆண்டுகளாக மாபெரும் சக்தியாக, 185 நாடுகளை சேர்ந்த மக்களிடையே பெரும் நம்பிக்கையை பெற்றுளோம்.
அதன்படி, 19,000க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ சேவை வழங்குவதுடன், 20 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இத்தனை ஆண்டுகளில், 30 லட்சம் நோய் தடுப்பு பரிசோதனைகள், 2 கோடி நோய் கண்டறிதல் சோதனைகள், 11 லட்சம் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 51 லட்சம் அறுவை சிகிச்சைகள், 27,000க்கும் அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், 22,000க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், நான்கு கோடி இந்தியர்கள், 'அப்பல்லோ 24/7 டிஜிட்டல் ஹெல்த்' வாயிலாக பயன் அடைந்துள்ளனர்.
சமூகத்தில் நலிவுற்றவர் களில், 19 லட்சம் பேர் அப்பல்லோ அறக்கட்டளையின் சமூக நலத் திட்டங்களில் பயன் பெற்று உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஹெச்1பி விவகாரம்: பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர்; மத்திய அரசு நம்பிக்கை
-
தமிழகத்தில் சிறுநீரகத் திருடர்களுக்கான அரசு: சாடுகிறார் அன்புமணி
-
வெற்றிகரமாக நிறைவு பெற்றது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!
-
நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!
-
கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!
-
மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு