புதிய முதலீடுகள் யு.ஏ.இ., - இந்தியா பேச்சு

அபுதாபி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இந்தியா உயர்மட்ட கூட்டு முதலீட்டு பணிக்குழுவின் 13வது கூட்டம், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஷேக் ஹமேத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இது குறித்து வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2022ல் இரு நாடுகள் இடையே அமலுக்கு வந்த விரிவான கூட்டு பொருளாதார ஒப்பந்தம், மத்திய வங்கிகள் இணைந்து செயல்படுதல் மற்றும் விண்வெளி, கடல்சார் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த அமைக்கப்பட்டு வரும் பாரத் மார்ட் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மேலும்
-
நவராத்திரி முதல் நாளில் 10 ஆயிரம் கார் விற்பனை: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
-
‛‛சேட்டான்''கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!
-
மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்
-
நாமக்கல்லில் வருமான வரித்துறை ரெய்டு
-
அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!