மணிப்பூரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் வீரமரணம்

3

இம்பால்: மணிப்பூரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அசாம் ரைபிள் படைப்பிரிவுக்கு சொந்தமான வாகனத்தில் பாராமிலிட்டரி படை வீர்கள் மணிப்பூரின் இம்பாலிலிருந்து பிஷ்னுபூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இம்பால் மாவட்டத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள நம்போல் சபால் என்ற பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பல வீரர்கள் காயமடைந்தனர்.


அவர்கள், அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இத் தாக்குதலுக்கு மணிப்பூர் கவர்னர் அஜெய் பெல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Advertisement