இந்தியா, பாக் உள்ளிட்ட 11 போர்களுக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா; டிரம்பின் அடுத்த காமெடி

வாஷிங்டன்; இந்தியா, பாக் உள்ளிட்ட 11 போர்களுக்கு அமெரிக்க மத்தியஸ்தம் செய்திருக்கிறது என்ற தமது ஆதரவாளரின் சுமூக ஊடக பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்து இருக்கிறார்.
அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் பைரான் டொனால்ட்ஸ். கருப்பின நபரான இவர், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். இவரை 2026ம் ஆண்டு புளோரிடா கவர்னர் வேட்பாளராக டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.
இந் நிலையில், இவர் தமது ட்ரூத் சோஷியல் சமூகவலை தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச அளவில் நிகழ்ந்த 11 சண்டைகளுக்கு மத்தியஸ்தம் செய்தது அமெரிக்கா என்று குறிப்பிட்டு இருக்கிறார். எந்தெந்த நாடுகளுக்கு இடையேயோன போரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது என்பதை உணர்த்தும் அல்லது அனைவருக்கும் தெரியும் வண்ணம், சம்பந்தப்பட்ட நாடுகளின் கொடிகளுடன், நாடுகளின் பெயர்களையும் டொனால்ட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர்மீனியா---அஜர்பைஜான், கம்போடியா--தாய்லாந்து, காங்கோ-ருவாண்டா, எகிப்து- எத்தியோப்பியா, செர்பியா- கொசோவோ, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளை டொனால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், மொராக்கோ, சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான மோதல்களும் உண்டு.
ட்ரூத் சோஷியல் பதிவில், மோதலில் ஈடுபட்ட 2 நாடுகளின் கொடிகளை பதிவிட்டு, அதன் அருகில் அமெரிக்க கொடியும் பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வலிமையான செயல் மூலம் அமைதி கிடைத்துள்ளது என்ற ஒரு வரியையும் இணைத்துள்ளார்.
பைரோன் டொனால்ட்ஸின் பதிவை அப்படியே தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு நானே காரணம் என்று டிரம்ப் பல முறை கூறி இருக்கிறார். உக்ரைன் மோதலில் ரஷ்யா தன்னை ஏமாற்றிவிட்டது என்றும் குற்றச்சாட்டி உள்ளார்.
மேலும்
-
வாகன அப்டேட்ஸ்
-
பாலஸ்தீன விவகாரத்தை பேசும்போது 'மைக்' துண்டிக்கப்பட்டதால் சந்தேகம்
-
'பருவநிலை மாறுபாடு மிகப்பெரிய மோசடி'
-
நான் ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன் ஆனால் மற்றவர்களுக்கு அக்கறை இல்லை ஐ.நா.,வில் பொருமி தள்ளிய அமெரிக்க அதிபர்
-
நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை
-
இதை செய்தால் மட்டுமே நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்