ஜிஎஸ்டி வரிகுறைப்பால் இந்தியாவின் வளர்ச்சி முன்பைவிட வேகம் ஆகும்; அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

புதுடில்லி; ஜிஎஸ்டி வரி மறு சீர்திருத்தத்தால் இந்தியாவின் வளர்ச்சி முன்பை விட வேகமாக வளரும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;
பால் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜியமாக்கியது, அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பல் துலக்கும் பிரஷ், பேஸ்ட். தலைக்கு தடவும் எண்ணெய், ஷாம்பூ ஆகிய பொருட்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளது. அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம், ஒவ்வொரு வீட்டில் வசிப்போருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மூத்த குடிமக்களுக்கான பாலிசி, 33 உயிர்காக்கும் மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகளுக்கு பூஜ்ஜிய ஜிஎஸ்டி, ஆக்சிஜன், அறுவை சிகிச்சை கருவிகள், பல் மற்றும் கால்நடை மருத்துவ கருவிகள் ஆகியவைகளுக்கு குறைந்தபட்ச ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தம் நாட்டு மக்களின் சேமிப்பில் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை கொண்டு வரும்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாய உபகரணங்கள் வாங்குவோர் மற்றும் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர். இப்போது நாட்டு மக்கள் அதிக வாகனங்களை வாங்குவதை பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ஜிஎஸ்டி சீர்திருத்தம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்களும் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கமான பொருட்களில் இருந்து காணப்படும் தனித்துவம் மிக்க பொருட்களை ஏற்றுக் கொள்வீர்கள்.
இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்ற திட்டம், ஏழைகள், மகளிர், விவசாயிகள் ஆகியோருக்காக பிரதமர் மோடி சேவை செய்து வருகிறார் என்பதற்கான சான்றாகும். புதிய சீர்திருத்தங்கள் மக்களின் செலவினங்களை குறைக்கும்.
உலகின் மிகவும் வளமான நாடாக மாற வேண்டும் என்ற பாதையில் நாட்டின் வளர்ச்சியை மேலும் வேகமாக கொண்டு செல்லும். பிரதமர் மோடியின் அரசு, நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிப்பதை வரி சீர்திருத்தம் உறுதி செய்கிறது.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பல அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியானது, இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது.

மேலும்
-
சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''
-
நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: இந்தாண்டு பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு
-
விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
-
இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்