இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

2


இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி ரூ.5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இட்டாநகரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அருணாச்சலப்பிரதேசம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பூமி. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் இரட்டை நன்மைகளுக்கான எடுத்துக்காட்டாக இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். பிரதமரான பிறகு 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது.

2 லோக்சபா தொகுதிகள்



சூரியனின் கதிர்கள் முதலில் விழும் இடம் அருணாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கு வளர்ச்சி ஏற்பட பல ஆண்டுகள் ஆனது. அருணாச்சலப்பிரதேசத்தில் குறைவான மக்கள் மட்டும வசிக்கின்றனர். இங்கு இரண்டு லோக்சபா தொகுதிகள் மட்டுமே உள்ளது என காங்கிரஸ் புறக்கணித்தது. இது போன்ற காங்கிரசின் மனநிலை அருணாச்சலப்பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்தது.

16 மடங்கு



அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம். டில்லியில் அமர்ந்தபடியே வடகிழக்கு மாநிலத்தை மேம்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்ததால், அமைச்சர்கள், அதிகாரிகளை அடிக்கடி அந்தப் பகுதிக்கு அனுப்பினேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement