கோவை, நீலகிரி, தேனி உட்பட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 22) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு வங்க கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி

* திண்டுக்கல்

* கோவை

* நீலகிரி

* சேலம்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு




செப்., 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி

* கோவை



சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement