'விப்ரோ' பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு : 'பெங்களூரு - இப்பலுார் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, விப்ரோ வளாகம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, 'விப்ரோ' நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
பெங்களூரு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில், வெளிவட்ட சாலையில் உள்ள இப்பலுார் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் ஒன்று.
இது, போக்குவரத்து, உற்பத்தி திறன், நகர்ப்புற வாழ்க்கை தரத்தை மோசமாக பாதிக்கிறது. இத்தகைய சூழலில், 'விப்ரோ' சந்திப்பில் உள்ள 'விப்ரோ' அலுவலக வளாகம் வழியாக, வாகன போக்குவரத்தை அனுமதிப்பதற்கான சாத்திய கூறுகளை நீங்கள் ஆராய விரும்புகிறேன்.
'விப்ரோ' வளாகம் வழியாக வாகனங்கள் சென்றால், வெளிவட்ட சாலையில், 'பீக் ஹவரில்' 30 சதவீதம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று, போக்குவரத்து நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
உங்கள் குழு, எங்கள் அதிகாரிகளுடன் பேசி, 'விப்ரோ' வழியாக வாகனங்கள் செல்ல திட்டம் உருவாக்கினால், மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



மேலும்
-
அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?
-
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக்; சீனாவை வழிக்கு கொண்டு வந்தார் டிரம்ப்
-
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே சிறுத்தை, கரடியை பிடிக்க கூண்டு
-
விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
-
பொள்ளாச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி
-
காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்