பொள்ளாச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், 35, அவரது சகோதரிகள் முத்துலட்சுமி, 45, மீனாட்சி, 36 ஆகியோருடன், கடன் தொல்லை காரணமாக ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு நாட்களாக தங்கியுள்ளனர்.
இச்சூழலில், மூன்று பேரும் நேற்று தீப்பெட்டி தயாரிப்புக்கு பயன்படுத்தும், 'பொட்டாசியம் பெர்மாங்கனேட்' என்ற மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலைக்கு முயற்சித்த னர். அவர்களை உறவினர் கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
போலீசார் கூறியதாவது: கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், அவரது சகோதரிகள் முத்துலட்சுமி,46, மீனாட்சி, 36 ஆகியோர், சீட்டு மற்றும் குறைந்த வட்டிக்கு மற்றவர்களிடம் பணம் வாங்கி, அதிக வட்டிக்கு மற்ற நபர்களுக்கு கடன் கொடுத்துள்ளனர்.
கொடுத்த பணம் வராததால், கடன் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த, இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துக்கிருஷ்ணன், தனது இரண்டு பெண் குழந்தைகள், சகோதரிகளுடன் பொள்ளாச்சி பி.கே.எஸ்.,காலனியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
கடன் அதிகமாக ஏற்பட்டதால், தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தும் மருந்தை குடித்தனர். இது குறித்து விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.