ஆலோசனை கூட்டம்

நெய்வேலி: நெய்வேலியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை தனியார் பள்ளியில் வரும் 4ம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் 17 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலாசனை அளிக்கின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், டாக்டர்கள் அறிவொளி, சுப்பிரமணிய சிவா, பாலாஜி, மீரா கோமதி, பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement