கோயில்கள் அருகில் குடிமகன்கள் அட்டகாசம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடையில் குவியும் குடிமகன்கள் கூட்டத்தால், கோயிலுக்கு செல்ல முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோடு அருகில் டாஸ்மாக் உள்ளது.

கடையின் அருகில் முன், பின் பக்கத்தில் அமுதலிங்கேஸ்வரர் கோயில், யோகிராம் கோயில், ஆழாக்கு அரிசி விநாயகர் கோயில், மாலைக்காரி அம்மன் கோயில் உள்ளது. எதிரே பெண்கள் படிக்கும் கம்ப்யூட்டர் சென்டர், மெடிக்கல் ஷாப், மசூதி, துவக்க பள்ளி, மருத்துவ மனைகள் உள்ளன. இந்த ரோடு வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன.

குடி மகன்கள் குடித்துவிட்டு ரோடு அருகிலேயே போதையில் விழுந்து கிடக்கின்றனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில்களுக்கு செல்ல முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். குடிமகன்கள் ரோட்டில் போதையில் தள்ளாடி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மாவட்ட நிர்வாகம் மதுரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement