நெற்பயிரில் 'புகையான்' கட்டுப்படுத்த யோசனை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டாரத்தில் குருவை நெல் சாகுபடியில் புகையான் தாக்குதல் துவங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறியதாவது:

தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரமிடுதல் கூடாது. பூச்சி தாக்கிய வயல்களில் தண்ணீரை உடனே வடிக்க வேண்டும். மறு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்கை பைரிதராய்டு மருந்துகளை தவிர்க்கவும். பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு ஏக்கருக்கு பயிரின் அடிப்பாகம் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் 3 சதவீதம் 6 லி., (அல்லது) அசாடிராக்டின் 0.05 சதவீதம் 400மி.லி., (அ) பியூப்ரோசின் -0.25 சதவீதம், எஸ்.சி-320 மி.லி, (அ)குளோராடோரினிபுருள் -18.5சதவீதம் எஸ்.சி 60கிராம்,(அ) பிப்ரோனில் 5சதவீதம் எஸ்.சி.,400 மி.லி., (அ) இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.சி-40-50 மி.லி, (அ)கார்போசல்பான் 25சதவீதம் இ.சி-400 மி.லி., அல்லது டினோடெபூரான் 20சதவீதம் எஸ்.சி.,-60-80கிராம் அல்லது பைமெட்ரோசின் 50 சதவீதம் டபூல்யூ.ஜி -120 கிராம் என விவசாயிகள் உரிய நேரத்தில் தெளித்து புகையானை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement