வரலாறு படைத்தார் ஷீத்தல் தேவி * உலக பாரா வில்வித்தையில்...

குவாங்ஜு: உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் ஷீத்தல் தேவி.
தென் கொரியாவின் குவான்ஜு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி 18, உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான துருக்கியின் கியுர் கிர்டியை சந்தித்தார்.
துவக்கத்தில் இருந்து முன்னிலை பெற்ற ஷீத்தல் 146-143 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். 2023 உலக சாம்பியன்ஷிப்பில் கிர்டியிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி தந்தார் ஷீத்தல்.
தவிர, உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை (இரு கைகள் இல்லாத) என வரலாறு படைத்தார் ஷீத்தல் தேவி.
முன்னதாக 2022ல் அமெரிக்க வீரர் மாட் ஸ்டட்ஸ்மான், இரு கைகள் இல்லாமல் தங்கம் வென்றிருந்தார்.
இரட்டையரில் வெள்ளி
பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, 148-150 என துருக்கியின் கியுர், பர்சா ஜோடியிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி, 152-149 என பிரிட்டனின் கிரின்ஹாம், மெக்குயன் ஜோடியை சாய்த்து வெண்கலம் கைப்பற்றியது.
தோமன் 'தங்கம்'
ஆண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராகேஷ் குமார், தோமன் குமார் பங்கேற்றனர். முதல் செட் முடிந்த பின், ராகேஷ் பயன்படுத்திய வில் பழுதடைய, போட்டியில் இருந்து விலகினார். தோமனுக்கு தங்கம், ராகேஷிற்கு வெள்ளி கிடைத்தது.
மூன்று பதக்கம்
தென் கொரிய போட்டியில் ஷீத்தல் தேவி, மூன்று பதக்கம் (தங்கம், வெள்ளி, வெண்கலம்) கைப்பற்றினார். இதையடுத்து, ஒரு பாரா உலக சாம்பியன்ஷிப்பில், 3 பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
* பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஷீத்தல் தேவி, 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்றுள்ளார்.
மேலும்
-
தமிழகம் முழுவதும் பத்திரவுப்பதிவு இணையதளம் திடீர் முடக்கம்; பொதுமக்கள் அவதி
-
தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; 'அரட்டை' செயலிக்கு அதிகரிக்கும் மவுசு
-
கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப கூடாது: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
-
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க., நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; அக்.3ல் விசாரணை
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போலீஸ் எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
-
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; விஜய் மீது திமுக போலீசில் புகார்