அனிருத் ஜோடி சாம்பியன்

ஜிங்ஷன்: சாலஞ்சர் கோப்பை டென்னிசில் இந்தியாவின் அனிருத் ஜோடி சாம்பியன் ஆனது. சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனிருத் (தமிழகம்) சந்திரசேகர், அமெரிக்காவின் ரீஸ் ஸ்டால்டர் ஜோடி, தைவானின் டிசங் ஹாவோ, தென் கொரியாவின் உய்சங் பார்க் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அனிருத் ஜோடி 6-2 என வென்றது. அடுத்த செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கரில்' அனிருத் ஜோடி 10-7 என அசத்தியது. ஒரு மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அனிருத் ஜோடி 6-2, 2-6, 10-7 என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement