முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; விஜய் மீது திமுக போலீசில் புகார்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிதாக தவெக தலைவர் விஜய் மீது திமுக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிதாக தவெக தலைவர் விஜய் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.










