தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; 'அரட்டை' செயலிக்கு அதிகரிக்கும் மவுசு

நமது நிருபர்
சுதேசி சமூக வலைதளமான அரட்டைக்கு நாளுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரிக்கிறது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா அநியாய வரி விதிப்பு செய்ததை தொடர்ந்து, உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த சமூக வலைதளங்களை தவிர்த்து, உள்நாட்டு தயாரிப்பான 'அரட்டை' சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் எண்ணம் கொண்டு அதை டவுண்லோடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால், இவ்வளவு காலமாக தினமும் சராசரியாக 3500 பேர் வரை இருந்த புதிய பயனர்கள் சேர்க்கை, இப்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது.
தினமும் மூன்றரை லட்சம் பேர் வரை புதியதாக அரட்டை செயலி டவுண்லோடு செய்து கணக்கு தொடங்குகின்றனர்.
அதற்கு தகுந்தபடி, அதன் உட்கட்டமைப்பை மாற்றும் பணியில் அரட்டை செயலியின் உரிமையாளரான ஸோகோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை அந்நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அடிப்படை கட்டமைப்பை அதிகரித்து வருகிறோம். செயலியை நல்ல முறையில் மேம்படுத்தி, குறைகளை சரி செய்து வருகிறோம்.
@quote@ வரும் நவம்பர் மாதம் பெரிய அளவில் இந்த செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இன்னும் பல புதுமையான அம்சங்கள் அதில் இடம் பெறச் செய்ய இருக்கிறோம்.quote
இன்னும் பல செயல் திட்டங்கள் அரட்டைக்காக உள்ளன. இன்னும் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. உங்கள் பொறுமைக்கு நன்றி. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
@block_P@
அரட்டை செயலிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சுதேசி தயாரிப்பை பயன்படுத்தும் நல்லுணர்வை வெல்ல வேறு எதுவும் கிடையாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலியான 'அரட்டை' பயன்படுத்துவதில் பெருமை அடைகிறேன். நானும், எனது சகாக்களும் அதில் இருக்கிறோம். அதில் உங்களையும் காண ஆவலுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.block_P







