170 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க தடுப்பூசி

கருமத்தம்பட்டி; கிட்டாம்பாளையத்தில் நடந்த முகாமில், 170 கால்நடைகளுக்கு, குடற்புழு நீக்க தடுப்பூசிகள் போடப்பட்டன.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கிட்டாம்பாளையத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்தும், அவற்றிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். சிறந்த முறையில் கால்ந டைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மண்டல துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் கீதா, கிட்டாம் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று, தாது உப்பு கலவை, உனி மருந்துகளை, விவசாயிகளுக்கு வழங்கினர்.
கால்நடை மருத்துவர்கள் கனகராஜ், செந்தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி, செல்வராஜ் உள்ளிட்டோர், 170க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள், நாய்களுக்கு குடற்புழு நீக்க தடுப்பூசிகளை போட்டனர்.