இணைப்பு கால்வாய் மாயம்: வெள்ள நீர் புகும் அச்சம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே இணைப்பு கால்வாய் மாயமானதால் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது.

இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி பாலாற்று பாலத்தில் இருந்து, சிங்கம்புணரி உப்பாறு பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு இணைப்பு கால்வாய் உள்ளது. மழைவெள்ள காலங்களில் பாலாற்றில் ஓடும் உபரி நீர் இக்கால்வாய் வழியாக வந்து உப்பாற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கால்வாய் சில இடங்களில் மண்மூடியும் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்த இடமே தெரியாமல் போனது. இதனால் மழை காலங்களில் பாலாற்றில் வெள்ளம் வரும் போது ஓசாரிபட்டி, பாரதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட இணைப்புக் கால்வாயை மீட்டு சீரமைக்க பொதுப்பணித்துறையினர் முன்வரவேண்டும்.

Advertisement