ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

10

புதுடில்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு நாளை டில்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.



1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று(அக்டோபர் 2) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.இதனை முன்னிட்டு, டில்லியில் நாளை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.


இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அக்., 1 ல் டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. அவ்விழாவில், ஆர்எஸ்எஸ்எமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி உரையாற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement