சங்குமுகத்தில் உயிரிழந்த கடல் ஆமை

காலை சூரியன் மெதுவாக எழுந்துகொண்டிருந்தது. சங்குமுகம் கடற்கரையின் அலைகள் வழக்கம்போல மணலை வந்து வந்து தழுவிக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அன்றைய தினம் வெறுமனே வந்து போகவில்லை ஒரு துயரத்தையும் கொண்டு வந்தது.
அந்த துயரத்திற்கு காரணம் இறந்து போன கடல் ஆமை.
அது ஒரு சாதாரண ஆமை அல்ல. ஆர்ப்பரிக்கும் கடல் அலைக்கு நடுவே ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திக் களித்த ஆமை. ஒருகாலத்தில் பவளப்பாறைகளின் நடுவே விளையாடி, கடல் புல்வெளிகளின் ஆழ அகலங்களில் அலைந்து திரிந்த ஆமை. ஆனால் இன்று மணலில் சடலமாக சரிந்திருக்கும் அதன் இறப்பு இயற்கையானதல்ல அதுதான் துயரம்.
கடலில் கணக்கு வழக்கு இல்லாமல் வீசப்படும் பிளாஸ்டிக்குகளில் எது உணவு எது பிளாஸ்டிக் என பிரித்தரியாமல் விழுங்கியதால் இறந்ததா? மீனவர்கள் மீனுக்கு விரிக்கும் வலையில் சிக்கும் போது அதை மனிதாபிமானத்தோடு விடுவிக்காமல் இது எக்கேடு கேட்டால் என்ன என்று அடிபடும் விதமாக துாக்கி எறிந்ததன் விளைவா? கவிழந்த கப்பலில் இருந்து கசிந்த எண்ணெயில் சிக்கியதாலா? இல்லை இன்னும் மாசு பட்டுவரும் கடல் சூழலா?இதில் எது ஆமையின் உயிரைப்பறித்தது என்பது யாருக்கும் தெரியாது.
ஒரு கடல் ஆமையின் உயிரிழப்பு, மொத்த கடல்சூழலின் சங்கிலியை உடைக்கும். ஆமை இல்லாமல், கடல் வளம் இல்லை,கடல் வளம் இல்லை என்றால் மனித வளமே இல்லை.
சங்குமுகத்தில் கடலில் இறந்து ஒதுங்கிய இந்த ஆமை இயற்கை வஞ்சிக்கும் மனிதர்களுக்கு நிறைய செய்திகளை சொல்லி எச்சரித்துள்ளது,எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் நல்லது.
-எல்.முருகராஜ்
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
-
வடபழனி கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்