அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
ஆம்பூர், ஆம்பூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு, மறியலில் ஈடுபட்ட மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான கழிவுநீர் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என, அப்பகுதி மக்கள் ஏற்கனவே, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை, 9:00 மணியளவில் ஆம்பூர் - -பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உமராபாத் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள், கழிவுநீர் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்டவை என எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை முறையாக செய்து தரவில்லை. இதனால் மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால் எந்த பணியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காண கேட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
-
வடபழனி கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்