கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

11

சென்னை: அடுத்த 2 வாரங்களுக்கு விஜய் மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.


கரூரில் விஜயின் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சூழலில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களே நேரில் சந்திப்பேன் எனவும், மன வேதனையில் இருக்கிறேன் எனவும் விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று அடுத்த 2 வாரங்களுக்கு விஜய் மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கை: நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், விஜயின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.



இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement