ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
சென்னை:
சென்னை ரயில் கோட்டத் துக்கு உட்பட்ட 11 ரயில் நிலையங்களில் 135 கோடி ரூபாயில் 'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்' என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த, வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்' என்பது ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க, ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப் பாகும். இது இயந்திரவியல், மின்னியல் மின்சார வியல் தொடர்புடையது.
சென்னை கோட்டத்தி ல், காட்பாடி - ஜோலார் பேட்டை இடையே உள்ள காட்பாடி சந் திப்பு, குடியாத்தம், வளத்துார், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூர், வின்னமங்கலம், வாணியம்பாடி உட்பட 11 ரயில் நிலைய பகுதிகளில், எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உடைய அதிநவீன சிக்னல் திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே வாரியம், இத்திட்டப்பணிகளுக்கு 135.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நவீன சிக்னல் தொழில்நுட்பம் செயல்படுத்தும்போது, ரயில்களின் வேகம் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி
-
சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாக்: எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்!
-
இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
சுங்கத்துறையினர் மீது லஞ்சப்புகார் கூறி சேவையை நிறுத்திய சரக்கு நிறுவனம்; நடந்தது என்ன?
-
ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
-
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச 'அரட்டை' செயலி