வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஐந்து வெவ்வேறு திட்டப்பகுதிகளில், 132 வணிக மனைகளை இ - ஏலம் வாயிலாக விற்கும் பணிகளை, வீட்டு வசதி வாரியம் துவக்கி உள்ளது.
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில் மனைப்பிரிவு திட்டங்களில் வணிகம், பள்ளிக்கூடம், வழிபாட்டு இடம் போன்ற தலைப்பு களில் நிலம் ஒதுக்கப் பட்டன.
இந்நிலங்களை அதற்குரிய அரசு துறைகள் பெறவில்லை. இதனால், இந்த மனைகள் நிலுவையில் உள்ளன.
இது போன்ற நிலுவையில் உள்ள வணிக மனைகளை விற்பதற்காக, வாரியம் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வருகிறது. பொது ஏல முறையில் விற்க, ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இது குறித்து, வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர், 67; காக்களூர், 45; பெருமாள்பேட்டை - ஒன்பது; செவ்வாய்பேட்டை - ஏழு; பெரிய குப்பம் - நான்கு என மொத்தம், 132 வணிக மனைகள் விற்பனைக்கு உள்ளன.
இந்த மனைகளை இ - ஏலம் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதில் பங்கேற்க விரும்புவோர், அக்., 23க்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!