தரமான, சுவையான ஆந்திர வகை உணவுகளுக்கு நந்தனா பேலஸ்

பெ ங்களூரு மற்றும் சென்னைவாழ் ஆந்திர வகை உணவு பிரியர்களுக்கு சுவையான ஆந்திர உணவுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், டாக்டர் ஆர்.ரவிச்சந்தர் 1997ல் தொடங்கிய உணவகம் தான் நந்தனா பேலஸ்.

தொழில் மீது காட்டிய பக்தி, மதிப்பு, அர்ப்பணிப்பால் நந்தனா பேலஸ் உணவகம் அடைந்த அதிவேக வளர்ச்சி இளம் தொழில் முனைவோருக்கு பெரும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. வாடிக்கையாளர் களிடம் மதிப்பையும், அங்கீகாரத்தையும் பெற்ற அவர், அடுத்தடுத்து வெற்றிப் படிக்கட்டுகளில் கால் பதித்தார்.

வீடுகளில் காலம் காலமாக சமைக்கப்படும் ஆந்திர வகை உணவுகளை சமைப்பதில் வல்லுனர்களை வைத்து சமைத்து வழங்குகிறது, நந்தனா பேலஸ் சைவம், அசைவம் என இரண்டு வகை உணவுகளை விரும்பி உண்போரின் தேவையை அறிந்து வழங்குவதால், வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து உணவுகள் பட்டியலிடப்பட்டிருப்பதை மெனுகார்டில் பார்க்க முடியும்.

இதன்மூலம் எண்ணிலடங்கா உணவுப்பிரியர்களை தன்வசம் வைத்துள்ள நந்தனா பேலஸ், தனது உணவு சேவை மீது அன்பு காட்டும் வாடிக்கையாளர் களுக்கு நன்றி செலுத்துகிறது. இங்கு, சிறந்த நவீன வசதி களுடன் 'ஏசி' பார்ட்டி ஹால் உண்டு.

நல்ல தரமான அரிசியில் சமைக்கப்பட்ட ஆந்திர வகை பருப்பு பொடி சாதத்துடன், ஆந்திர பருப்பு மற்றும் காய்கறிகள் நிறைந்த சாம்பார், பாரம்பரி யமான காரசாரமான கூட்டு, பொறியல் வகைகளை வாழை இலையில் பரிமாறும்போது, அதன் ருசியே தனி ரகம்.

சைவத்தில் காலிபிளவர் மஞ்சூரியன், காளான் கீ ரோஸ்ட், கேரட் 65, பேபிகார்ன் புதினா ட்ரை மற்றும் அமராவதி சிக்கன் ட்ரை, குண்டூர் சிக்கன் ட்ரை, மட்டன் பெப்பர் ட்ரை, சிக்கன் சத்திரியா, மூங்கில் சிக்கன், சிக்கன் ஷோலே கபாப், பிஷ் பிரை, நெல்லுார் சிக்கன், மட்டன் பிரியாணி, நாட்டி ஸ்டைல் தொன்னை பிரியாணி வகைகள்.

சுப்ரீம் போன்லஸ் சிக்கன் பிரியாணி, வெஜ் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி போன்ற பல வகை சைவ, அசைவ உணவு பதார்த்ததுடன் ஆந்திரா குண்டூர் மிளகாய் இயற்கை மசாலா தரத்துடனும், நறுமணத்துடன், கோங்குரா சட்டினியுடன் மிக சிறந்த வகையில் பரிமாறப்படுகிறது.

Advertisement