கட்டட துறை தொழில் நுட்பத்தில் 'சர்வதேச சாதனை' படைத்துள்ள  மனோஜ்

அ மெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் கட்டட துறையில் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன், அந்த நிலத்தின் தன்மை குறித்தும், எத்தனை மாடி கட்டடங்கள் உருவாக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆராய்ந்து அதன் பின்னரே முடிவு செய்வது வழக்கம்.

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், இதை விட முக்கியமாக கட்டுமான பொருட்களின் பயன்பாடு, மனித உழைப்பிற்கான நேரம் ஆகியவற்றையும் மேற்கத்திய மற்றும் ஐரோப்பா நாட்டினர் அறிந்து கொள்கின்றனர். இதனால், கட்டுமான பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் இன்றி திட்டமிட்ட செலவிலும் முழுமை அடைகிறது என்கிறார், கட்டட துறை புதிய தொழில்நுட்பத்தில் சர்வதேச சாதனை படைத்து வரும் மனோஜ்.

இது குறித்து அவர் கூறியதாவது :

என் தாத்தா பால சுந்தரம் சிறந்த தொழில் அதிபர் அவரை பின்பற்றி என் தந்தை ராதாகிருஷ்ணாதொழில் அதிபரா கவும், ஏற்றுமதி - இறக்குமதியாளராகவும் உள்ளார். அதே நேரம் எனக்கு சிறுவயதில் கட்டட துறையில் விருப்பம் ஏற்பட்டது.

கட்டடம் கட்டுவதில் ஆர்வம் ஏற்பட்ட நிலையில் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது கட்டட துறைக்கு மிகவும் பயனுள்ள புதிய மென் பொருளை உருவாக்கினேன்.

இந்த மென்பொருள் உதவியால் கட்டடத்திற்கான மொத்த செலவில் குறிப்பிட்ட சதவீதம் குறைகிறது. அதாவது மனித உழைப்பு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட மூலப்பொருளின் பயன்பாடு மிகவும் துல்லியமாக கணக்கிடப்பட்டு நேர்த்தியாகவும், அதே நேரம் நிலைத்தன்மை மற்றும் திடமான பாதுகாப்புடன் எத்தனை மாடி கட்டடங்களும் அமைக்க முடியும்.

மணல், செங்கல், கம்பி, மனித உழைப்பு உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு மிகவும் துல்லியமாக வரையறுக்கப்படுவதால், கட்டட தொழில் துறை பொருளாதாரத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement