மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

வடலுார் : மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடலுார் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆபத்தாரணபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பட்டறை அருகில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மதுபாட்டில் விற்பனை செய்த தென்குத்து பகுதியை சேர்ந்த கலியபெருமாள், 66; ஆபத்தாரணபுரம் ராஜகோபால், 74; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 21 மதுபாட்டில்கள், மொபெட், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement