வரிகள் ரொம்பப் பிடிக்கும்; அது அற்புதமான வார்த்தை: டிரம்ப்

வாஷிங்டன்: "எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகியுள்ளோம்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அவர் வரி விதிக்காத துறையே இல்லாத அளவுக்கு அனைத்திற்கும் வரி விதித்துள்ளார். மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப, எனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாம் மிகப்பெரிய பணக்காரர்களாகி வருகிறோம். நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டினோம். இந்த வரி விதிக்கும் முடிவை நாம் கைவிட்டால் நம்மிடம் இருக்கும் பணம் ஒருபோதும் இருக்காது. மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் அவர்களை நியாயமாக நடத்துகிறோம்.
நான் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று தகுதியின் கொள்கையை மீட்டெடுப்பது. அதுதான் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பது ஆகும். வரிவிதிப்பு என்ற வார்த்தையை நான் விரும்புகிறேன். வரிவிதிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு பெரிய வழக்கு உள்ளது, ஆனால் மற்ற நாடுகள் நமக்குச் செய்தது இதுதான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வரிவிதிப்பால் வரும் பணம் நாம் இதுவரை பார்த்திராத ஒன்று. அது நிறைய போர்க்கப்பல்களை வாங்க போதுமானது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
-
வடபழனி கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்