ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டம் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிப்பு

புதுடில்லி, ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி மற்றும் கட்டணங்கள் தள்ளுபடி திட்டத்தை, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு உட்பட சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் ஏற்றுமதியாளர்களுக்கு, நிம்மதி அளிக்கக் கூடிய செய்தியாக இது அமைந்துள்ளது.

ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களை தயாரிக்கும் போதும், வினியோகிக்கும் போதும் செலுத்தப்படும் வரி மற்றும் கட்டணங்களை, ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது 10,000க்கும் மேற்பட்ட ஏற்றுமதிப் பொருட்களை உள்ளடக்கியது.

ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மதிப்பில் 1 முதல் 4 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இத்திட்டம் நேற்றோடு முடிவடையவிருந்த நிலையில், அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பால் ஜவுளி, விவசாயம், பொறியியல் பொருட்கள், தோல் பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதி துறைகள் பெரிதும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

@block_B@ ஏற்றுமதியாளருக்கு நன்மை அமெரிக்கா வரியை உயர்த்தியதால், இத்திட்டத்தை அவசரமாக நீட்டிக்க வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இந்த நீட்டிப்பு, சர்வதேச சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொள்ளவும், வரி விதிப்பு போன்ற வெளிநாட்டு வர்த்தக தடைகளின் தாக்கத்தை சமாளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.block_B

Advertisement