அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விளக்கு பூஜை

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நவராத்திரி உற்ஸவ விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற விளக்கு பூஜை, குங்கும அர்ச்சனை, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.

பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை அமிர்தா வித்யாலயம் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement