பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் குருநானக் கல்லுாரி வெற்றி
சென்னை:
'டி - 20' பெண்கள் கிரிக்கெட் போட்டியில், குருநானக் கல்லுாரி அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குருநானக் கல்லுாரி சார்பில், பி.என்.தவான் நினைவு கோப்பைக்கான 'டி - 20' பெண்கள் கிரிக்கெட் போட்டிகள், வேளச்சேரி கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கின. நேற்று காலை நடந்த முதல் நாள் போட்டியை, கல்லுாரியின் அறக் கட்டளை செயலர் மஞ்சித் சிங் நாயர் துவக்கினார்.
முதலில், குருநானக் கல்லுாரி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 158 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, ஜி.என்.இ.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 20 ஓவர்கள் முழுமை யாக விளையாடி, நான்கு விக்கெட் இழந்து, 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement