இன்றைய நிகழ்ச்சி / அக். 2

நவராத்திரி விழா விஜயதசமி சடையலம்புதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, உச்சிகால பூஜையில் பஞ்சமூர்த்திகள், அம்மன் கோயில் ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், காலை 11:00 மணி முதல், தீபாராதனை முடிந்து 2ம் பிரகாரம் சுற்றி வந்து சேர்த்தியாதல், மாலை 6:00 மணி, 108 விணை இசை வழிபாடு, மாலை 4:30 மணி முதல்.

கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோட்டை வாசல் முன் அம்பு போடுதல், மாலை 5:15 மணி.

கூடலழகர் கோயில், மதுரை, பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி, மாலை 5:00 மணி.

துர்கா தேவி அலங்காரம்: மஹா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, வீதியுலா மாலை 6:00 மணி, அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, இரவு 7:00 மணி.

ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, கணபதி, லலிதா ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, காலை 8:00 மணி.

விஜயதசமியை முன்னிட்டு அம்மன், சுவாமி அம்பு போடுதல்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, இரவு 9:00 மணி.

விஜயதசமி கொலு சிறப்பு பூஜை: சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00.

விஜயதசமி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி, அம்பு போடும் நிகழ்ச்சி, காலை 9:30 மணி.

காமாட்சி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாமம், சுவாசினி, கன்யா பூஜை, காலை 9:30 மணி, குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல், காலை 11:00 மணி.

குதிரை வாகனத்தில் அம்மன் அருளும் காட்சி: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

குதிரை வாகனத்தில் அம்பு எய்தல்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:30.

விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடும் நிகழ்வு: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடும் நிகழ்வு: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

சக்தி சந்நியாசி சுவாமிகள் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

வேடன் அலங்காரம்: நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, சிறப்பு வழிபாடு, மாலை 4:00 மணி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து விளக்குத்துாண் அருகே அம்பு போடுதல், ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, இரவு 7:00 மணி.

விஜயதசமி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, துர்க்கை பூஜை, காலை 7:30 மணி, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், காலை 8:00 மணி, வித்யாரம்பம், காலை 10:30 மணி, அன்னை விஸர்ஜனம், மாலை 4:00 மணி, சாந்தி ஜலம் தெளித்தல், இரவு 7:00.

மஹா சண்டி ஹோமம், கன்யா பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், அசோக் நகர், மதுரை, காலை 8:00.

சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து கோயில் முன் அம்பு போடுதல், இரவு 7:00.

சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, குழந்தைகளுக்கு அக் ஷராப்யாஸம், காலை 9:30 மணி, வாய்ப்பாட்டு: அருண்மொழி, வயலின்: கந்தசாமி, மிருதங்கம்: பிரசன்னா, மாலை 6:30 மணி.

கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் - தேரோட்டம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:15 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. ஏற்பாடு: ஹரிபக்த சமாஜம்.

வித்யாரம்பம்: சாரதா சமிதி, வைகை தென்கரை, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 8:00.

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

விஜயதசமியை முன்னிட்டு புதிய குதிரை பிரதிஷ்டை, மஹா யாகசாலை, விஷேச அபிஷேகம், சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, அதிகாலை 5:00.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம்1:30.

பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் அலங்காநல்லுார், மணியஞ்சி: தலைமை: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, பரிசளிப்பவர்: மங்கையர்க்கரசி கல்விக் குழும தாளாளர் கல்யாணி, ஏற்பாடு: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, காலை 10:00 மணி.

சாமநத்தம்: மக்கள் தொகை கணக்கெடுப்புத் தொகுத்தல் பணி, காலை 9:30 மணி, தலைமை: தலைமையாசிரியை சார்லஸ் மேரி, சிறப்பு விருந்தினர்கள்: ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜலட்சுமி, முன்னாள் துணைத் தலைவர் தனசேகர பாண்டியன், செயலர் ரமேஷ், ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 12:30 மணி.

கோட்டையூர்: தலைமை: சி.இ.ஓ., ரேணுகா, சிறப்புரை: தாளாளர் சூசைமாணிக்கம், ஏற்பாடு: கருமாத்துார் செயின்ட் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, மாலை 6:00 மணி.

ராஜாக்கூர்: தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், பரிசளிப்பவர்கள்: பள்ளிக்குழு உறுப்பினர் ராஜா, காசிவிஸ்வநாதன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, காலை 9:30 மணி.

பொதும்பு: தலைமை: சி.இ.ஓ., ரேணுகா, கல்வி அலுவலர் இந்திரா, ஏற்பாடு: செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, காலை 8:00 மணி.

கோவில்பாப்பாக்குடி: தலைமை: சி.இ.ஓ., ரேணுகா, சிறப்பு விருந்தினர்: கல்வி அலுவலர் இந்திரா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: கூடல்நகர் செயின்ட் அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி.

கொடிமங்கலம்: தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், பரிசளிப்பவர்: என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, மதியம் 3:00 மணி.

மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' சிறப்புரை: ஆசிரியர்கள் அருண்குமார், வைரபிரகாசம், காலை 10:00 மணி, நிறைவு விழா, ஏற்பாடு: சி.புளியங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.

இரணியம்: தலைமை: ஊராட்சி முன்னாள் தலைவர் கருப்பையா, காலை 10:00 மணி, ஊர் மக்களுடன் கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மாலை 5:00 மணி.

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., பிறந்தநாள் மகளிருக்கு புத்தாடை வழங்கும் விழா: பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: நகர்க்கிளை தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: சிண்டிகேட் வங்கி ஓய்வு பெற்ற மேலாளர் சுந்தரராஜன், காலை 11:00 மணி.

ஓட்டல் ஜே.சி., ரெசிடென்சி, சொக்கிகுளம், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பங்கேற்பு: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஆடிட்டர் சேது மாதவா, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:00 மணி.

பொது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் இசை நிகழ்ச்சிகள்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, நாதஸ்வரம்: உதயகுமார், விஜயகிருஷ்ணன், தவில் - தமிழ்ச்செல்வன், தினேஷ், தாளம் - பிரேம் குமார், ஏற்பாடு: ஸத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

தானம் அறக்கட்டளை நிறுவன நாள்: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் பங்கேரா, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, காலை 9:30 மணி.

காந்தி ஜெயந்தி விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், சிலைக்கு மாலை அணிவித்தல், தேசிய கொடி ஏற்றுதல், காலை 9:30 மணி, அமைதிச் சங்க மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், வாழ்த்துரை: செயலாளர் நந்தாராவ், காலை 10:15 மணி, காந்தியும் சுற்றுச் சூழலும் நுால் வெளியீடுபவர்: கலெக்டர் பிரவீன்குமார், மதுரை இலக்கிய மன்றம் நிறுவனர் அவனி மாடசாமி தலைமையில் சிந்தனை பட்டிமன்றம், மாலை 6:00

மரங்களை காக்க உயிர் துறந்த ஜெகதீஷ்குமாருக்கு பசுமை அஞ்சலி செலுத்தும் வகையில் 2000 மரங்கள் நடுதல்: சூர்யா நகர், மதுரை, நடுபவர்: சோழன் குபேந்திரன், ஏற்பாடு: பார்வை பவுண்டேஷன், காலை 8:00 மணி.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: பா.ஜ., தமிழக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காலை 11:00 மணி.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் பிச்சைவேல், ஏற்பாடு: தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா அண்ட் குளோபல், காலை 11:00.

விளையாட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை அத்லெட்டிக் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:30 மணி.

மாநில அளவிலான மேகலா நினைவுக் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், காலை 8:00 மணி.

கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

Advertisement