விருதுநகரில் கொலு பூஜை

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்பில் ஒன்பது நாள் நடந்த நவராத்திரி கொலு பூஜையை கல்லுாரி உபதலைவர் டெய்சிராணி துவக்கி வைத்தார்.

தலைவர் சம்பத்குமார், உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, உள்பட பலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும் நவராத்திரி பூஜையின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது நாள் பூஜையில் 23 துறை பேராசிரியர்களும், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் மஞ்சு, மகாலட்சுமி, அழகுமணிக்குமரன் செய்தனர்.

Advertisement