எண்கள்

1,963
கடந்த மாதத்துக்கான யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் எண்ணிக்கை, முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் மொத்தம் 2,001 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், செப்டம்பரில் 1,963 கோடியாக குறைந்துள்ளது.
எனினும் மதிப்பு அடிப்படையில் 24.85 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 24.90 லட்சம் கோடி ரூபாயாக சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனை எண்ணிக்கை 31 சதவீதமும்; பரிவர்த்தனை மதிப்பு 21 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 65.40 கோடியாகவும்; மதிப்பு 82,991 கோடி ரூபாயாகவும் இருந்தது.
33,418
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கி சாரா நிதி நிறுவனமான ஐ.ஆர்.இ.டி.ஏ., நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் 33,148 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட 86 சதவீதம் அதிகமாகும். கடன் வழங்கலை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் 15,043 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 9,787 கோடி ரூபாயாக இருந்தது. நிலுவையில் உள்ள கடன் 84,445 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது.