தினமலர் இணையதளம்: ஹைப்பர் டெர்மினல் முதல் சுதேசி அரட்டை வரை: டெக்னாலஜி ரேசில் #1 குதிரை தினமலர்

த ற்போது உலகின் நம்பர் 1 தமிழ் செய்தி இணையதளமாக விளங்கும் தினமலர் இணையதளம், 1999 ஆகஸ்ட் 29 முதல் உலக தமிழர்களுக்குச் சேவை செய்து வருகிறது.


தொடக்கத்தில் ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மூலம் சென்னையில் உள்ள ஆர்பிட்டர் இன்போடெக் நிறுவனத்தின் உதவியுடன் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.


அன்று ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே இணைய உலாவிகள் மென்பொருள்கள் ஆதரவாக இருந்தது ( Browser software). எனவே இணைய தளங்கள் தமிழ் எழுத்து வடிவங்களில் பெற ஒவ்வொரு பயன்பாட்டாளரும் அவர்கள் பயன்படுத்தும் கணினியில் தமிழ் எழுத்துரு மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவினால் மட்டுமே தமிழில் செய்திகளை இணைய தளத்தில் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.


எனவே தினமலர் நிறுவனம் அதற்கான தமிழ் உரு இணைய தளத்திற்கு என்று கணினி தமிழ் எழுத்துரு மென் பொருளை ஒரு தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கி பெற்றது ( Shree lipi). இணைய தள முகவரியாக தினமலர்.காம் (dinamalar.com) பதிவு செய்யப்பட்டது. இணைய தளம், ஒருஇணய தகவலை உருவாக்கி அதனை இணையதளத்தில் வெளியிட (Web Hosting) ஸெர்வர் மிக முக்கியம். அன்றைய காலத்தில் அதிவேக இன்டெர் நெட் இணைப்புள்ள ஸெர்வர் அமெரிக்காவில் மட்டுமே இருந்தன. எனவே ஒரு அமெரிக்க நிறுவன ஸெர்வர் 1998ல் தேர்வு செய்யப்பட்டது.


சென்னையில் உள்ள ஆர்பிட்டர் நிறுவனம் மதுரையில் உள்ள செய்தி தகவல் சேகரிக்கும் அலுவலத்துடன் இணைந்து செய்திகளைபதிவேற்றம் செய்யத் தொடங்கியது. அதன் பின் 1999ல் முதல் முதலாக இரண்டு பக்கங்கள் (லிங்க்) கொண்ட தினமலர் இணைய தளம் பிறந்தது. இணையதள தகவல்களை தமிழில் உருவாக்கி அதனை (HTML முறையில்) இணைய ஸெர்வரில் பதிவேற்றம் செய்ய hyper terminial அதாவது அமெரிக்க ஸெர்வரையும் மதுரை ஸெர்வரையும் தொலை பேசி இணைப்பின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்டது.


மழை காலங்களில் தொலைபேசி தொடர்பும் கிடைக்காது; இணைய வழி தொடர்பும் கிடைக்காது; அத்தகைய தருணங்களில் ரிமோட் ஹய்ப்பெர் டெர்மினல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தினமும் 10 பேர் பார்த்தாலே பெரிதாக நினைத்து கொண்ட காலம். அன்றைய கால கட்டத்தில் செய்திகளை ஒருநாள் கூட பதிவேற்ற முடியாமல் போனதில்லை. புயல் மழை பூகம்பம் சுனாமி என எது நிகழ்ந்தாலும் ஒரு நாள் கூட தவறாமல் தினமலர் இணையத்தில் அன்றன்று தெரிவிக்கப்பட்டது.


அதன் பின் நாளிதழை முழுமையாக சுமார் 200 முதல் 300 செய்தி பக்கங்கள் தினமும் பதிவேற்றம் செய்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் ஆர்வமுடன் பார்க்கும் பகுதிகளில் அதிக செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டது.


செய்திகளுக்கு வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி உரிய தணிக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டது. டீக் கடைபெஞ்ச், கார்டூன் பகுதிகள் அறிமுகப்படுத்திய போது அதற்கென்ற பல ஆயிரம் பேர் தினமும் இணய பக்கம் வரத் தொடங்கினர். தினம் ஒரு குறள் பகுதியினை அறிமுகப்படுத்திய போது உலகம் முழுதும் இருந்தும் வாசகர்கள் பெரும் வரவேற்பை கருத்தாக பதிவிட்டனர்.


2005 களில் முதல் முதலாக வீடியோ விளம்பர பதிவுகள் வெளியானது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிகழ்ந்தபோது அந்த சமயம், தமிழில் கிரிகெட் புள்ளிகளை உடனுக்கு உடன் வீரர்கள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. உலகம் முழுதும் ஆங்கிலத்தில் கிரிக்கெட் ஸ்கோர் வரும் போது, தமிழர்களுக்கு அந்த தகவல்களை உடனுக்குடன் முதல் முதலாக தமிழில் பகிரப்பட்டது.


தேர்தல் முடிவுகள் மாநில வாரியாக சுட சுட பதிவேற்றம் செய்யப்பட்டது.


தினமலர் அச்சு பிரதியின் அனைத்து பகுதிகளையும் இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எளிதாக பார்க்கும் வகையில், பலவித உலாவிகள் மூலம் பக்கங்களை எளிதாக கடந்து செல்லவும் மீண்டு முதல் பக்கம் வரவும், எளிதாக அடுத்த அடுத்த பக்கங்கள் போகும்படியாகவும், எந்த பகுதியில் இருந்தும் முதல் பக்கம் வருவதற்கும் ஏதுவாக இணைப்புகள் கொடுத்து பக்கங்கள் அமைக்கப்பட்டது.


மேலும் புது புது உத்திகளை புகுத்தி தமிழில் முதல் முதலாக வாழ்த்து அனுப்பும் பகுதி உருவாக்கப்பட்டது. பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம், கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், ரம்சான், பக்ரீத், வேலென்டின் தினம், பெற்றோர் தினம் என விசேஷ நாட்களுக்கு தமிழில் வாழ்த்து அனுப்ப வைத்து அதில் அனிமேஷன் வாழ்த்துகள் லிங்க் அனுப்பிவைத்து, அந்த லிங்க் மூலம் அவர்களின் உறவுகள் நண்பர்களை தினமலர் இணய பக்கத்துக்கு வரவைத்தோம்.


தொடர்ந்து பல சிறப்பு பகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு, கடவுள்களின்உருவங்களுக்கு பூக்களால் அர்ச்சனை, தேங்காய் உடைத்து வாசகர்களே மௌவுஸ் பயன்படுத்தி கற்பூர ஆரத்தி எடுக்கும் அனிமேஷன்கள் என பல புதுமைகள் தொடர்ந்து புகுத்தப்பட்டது.


புதிதாக உலகத் தமிழர்கள் தங்கள் பகுதி செய்திகளை பதிவிட நிருபர்கள் உலகம் முழுதும் ஆன்லைனில் உறுப்பினர் பதிவு பகுதி பக்கம் உருவாக்கி அதில் சிறந்த நபர்களை தேர்ந்து எடுத்து அவர்கள் மூலம் அந்த நாட்டில் அவர்கள் பகுதியில் நடக்கும் கலை மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை சேகரித்து உலக செய்திகள் பகுதியில் பதிவேற்றம் செய்ய, உலகம் முழுதும் தமிழ் வாசகர்களை பெருகினர்.


தமிழக ஆலயங்கள் பற்றிய தனி பகுதி வடிவமைக்கப்பட்டு தமிழக ஆலயங்கள் பகுதி உருவாக்கப்பட்டு இன்று இந்தியா முழுதும் உள்ள பல ஆயிரம் கோவிலகளின் தகவல்களுடன் மிளிர்கின்றது.


தினசரி ராசி பலன், காலண்டர், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆன்மிக சிறப்பு பகுதி, நினைவில் நின்றவர்கள், வர்த்தகம், என பல பகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.


தற்போது செய்திகளைப் படிப்தோடு நில்லாமல் கேட்கவும், வீடியோவாக பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் நிகழும் முக்கிய நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.


மேலும் இணைய செய்திகள் என்ற தலைப்பில் வீடியோ செய்தித்தொகுப்பு 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தினமலர் வாசகர்கள் பின் தொடரும் பல்வேறு ஆப்களில் லேட்டஸ்ட், நமது சுதேசி நிறுவனமான ஜோஹோவின் *அரட்டை* இடம் பெற்றுள்ளது.


பல்வேறு தளங்களில்



தினமலர் இணையதளம்: www.dinamalar.com

கோயில்கள், ஆன்மிக செய்திகள்: https://temple.dinamalar.com/

பேஸ்புக்: https://www.facebook.com/Dinamalardaily

டுவிட்டர்: https://twitter.com/dinamalarweb

யுடியூப்: https://www.youtube.com/dinamalardaily

வீடியோ செய்திகள்: https://www.dinamalar.com/video_main.asp

மாவட்ட வீடியோ செய்திகள்: https://www.youtube.com/channel/UCgSLB71exvogds0OuXBn4Gg

டெலிகிராம்: https://www.dinamalar.com/telegram/?domain=web

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/dinamalardaily/

கூகுள் நியூஸ்: https://news.google.com/publications/CAAqBwgKMJGZjwsw8qOhAw/sections/CAQqEAgAKgcICjCRmY8LMPKjoQMw5-CtBg?ceid=IN:en&oc=3


மொபைல் ஆப்: https://play.google.com/store/apps/details?id=com.softcraft.dinamalar

Advertisement