போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிப்பு எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் 49 பேருக்கு மொத்தம் ரூ.1.03 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாதுகாப்புப் படை அதிரடி
2026ம் ஆண்டுக்குள் இந்தியாவை நக்சல் இல்லாத தேசமாக மாற்றுவது என மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதனையடுத்து அந்த அமைப்பினருக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் அதிரடி காரணமாக கடந்த சில நாட்களாக பல நக்சலைட்கள் உயிரிழந்து வருகின்றனர். அவர்களில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் அடக்கம். இதனையடுத்து அந்த அமைப்பினரின் ஆதிக்கம் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் சுருங்கி உள்ளது. இதனால், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என நக்சல் அமைப்பினர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அந்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துவிட்டார். அவர்கள் போலீசாரிடம் சரணடைய வேண்டும். ஆயுதங்களை கீழே போடுபவர்களை பாதுகாப்பு படையினர் எதுவும் செய்ய மாட்டார்கள் என உறுதி அளித்து இருந்தார்.
ரூ.1.03 கோடி பரிசுத்தொகை
இந்நிலையில், சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் 103 நக்சல்கள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைவதற்காக அவர்கள் சரணடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சரணடைந்தவர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்கும் எனவும், அவர்களில் 49 பேருக்கு 1.03 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது எனக்கூறியுள்ள அவர்கள், சரணடைந்தவர்களின் மறுவாழ்வுக்காக முதற்கட்டமாக அவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் புதிய கொள்கைப்படி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைபவர்களுக்கு வீடு, மருத்துவம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதுடன், அவர்கள் திறன் மேம்பாடு அல்லது சிறு தொழில் துவங்க விரும்பினால் அதற்கு தேவையான உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
-
இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி